Monday, February 27, 2006

சிரிப்பு

நீல மேகங்கள்
மழை பொழிவது போல்
உன் சிரிப்பு ஒலி

மாலை நேர
இளம்வெயில் போல்
உன் சிரிப்பு ஒளி

காலை இளம் வெயில்
உன் இனிய பேச்சை
நினைவுக்கு கொண்டு வருகிறது

மதிய வெயில்
உன் கோபத்தை
ஞாபகப்படுத்துகிறது

இருள் சூழ்ந்த இரவு
உன் அமைதியை
உறுதி செய்கிறது

ஸ்ரீராம்

மாறச்சொல்

காற்றில் வரும்
குப்பையாக மாறச்சொல்
மாறுகிறேன்

வானில் வரும்
மழைதுளியாக மாறச்சொல்
மாறுகிறேன்

ஆழ்கடலின் இருக்கும்
அலைகளாக மாறச்சொல்
மாறுகிறேன்

நெருப்பில் இருக்கும்
ஒழியாக மாறச்சொல்
மாறுகிறேன்

நிலத்தில் காணும்
கற்குவியலாக மாறச்சொல்
மாறுகிறேன்

ஆனால் என்னை
வேண்டாம் என்று
மட்டும்
சொல்லாதே
நான்
மாறமாட்டேன்
மடிந்துவிடுவேன்


பெண்ணே
நீ
உச்சரிக்கும் போதுதான்
என் பெயர்
எவ்வளவு
அழகு என்பது

நான் உன்னை
பார்க்கும் போதுதான்
தெரிகிறது
என் விழிக்கு என்ன
பயன் என்பது

Shreeram

என் இனிய குட்டி கவிதை

அந்த வானத்துக்கு நீலா சொந்தம்
இந்த பூமிக்கு மண் சொந்தம்

பூவுக்கு வாசம் சொந்தம்
செடிக்கு வேர் சொந்தம்

நீருக்கு மீன் சொந்தம்
நெருப்புக்கு கனல் சொந்தம்

மரத்துக்கு காற்று சொந்தம்
கனிக்கு விதை சொந்தம்

நான் உனக்கு சொந்தம்
நீ எனக்கு சொந்தம்
எனக்கு மட்டும் சொந்தம்

இப்படிக்கு srijith

Tuesday, February 21, 2006

என் இனிய கவிதை - ஸ்ரீராம்

சுனாமி

சுனாமி
வார்தையில்
ஒரு
விஷம்
பயம்
வந்து
சேரும்
ஒரு
புயல்
நம்மை
தாக்கும்
ஒரு
................

கனவு

ஆயிரம் வீடு கட்டும்
கொத்தனாருக்கு
குடிசை
கட்டும்
கனவு

பல்லாயிரம் முத்துக்களை
அள்ளி எடுக்கும்
மீனவனுக்கு
ஒரு முத்து
எடுக்கும்
கனவு

லட்சம் மூட்டை
நெல் பயிர் செய்யும்
உழவாளிக்கு
ஒரு நேரம்
கஞ்சி குடிக்கும்
கனவு

கோடிக்கு அதிபதியான
பணம் படைத்தவனுக்கு
பகல் முழுவதும்
சந்தோஷ
கனவு

கவிதை

கவிதை எழுதியது இல்லை
ஆனாலும்
கவிதை பிடிக்கிறது
தொடர்ந்து
படித்து கொண்டிருகிறேன்
அவள் கரு விழிகளில்

மலர்கள்

வாழ்க்கை எனும் பூச்சாடியில்
உபயோகமற்ற ஊத்தம் பூவாய்
அல்லாமல் புகழால்
உலகெங்கும் மணக்கும்
பன்னீர் ரோஜாவாய் வாழ வாழ்த்தும்
ஸ்ரீராம்

நீ

நீ என்றால் உன் என்று அர்த்தம்
உன் வாழ்க்கை உன் கையில்
உன் முன்னேற்றம் உன் கையில்
உன் எதிர்காலம் உன் கையில்
மொத்தமாக நீ உனக்கு மட்டும்

ஸ்ரீராம்