Friday, June 16, 2006

எங்கள் நாடு

ராகம்- பூபாளம்

1. மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல் இதுபோல?
பொன்னொளிர் பார தநாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

2. மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன் யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

3. இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையைவிரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடெ
ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே.

-பாரதியார்

Thursday, June 15, 2006

போகின்ற பாரதமும், வருகின்ற பாரமும்

(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

1. வலிமை யற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒ டுங்கினாய் போ போ போ
பொலிவி லாமு கத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலிய ழந்த குரலினாய் போ போ போ
ஒளிய ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினியாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

2. இன்று பார தத்திடை நாய் போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்றி கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்கவாய் போ போ போ

3. வேறு வேறு பாஷைகளை கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ


4. ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றவனை போ போ போ

வருகின்ற பாரத்தை வாழ்த்தல்)

5. ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

6. மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற வஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள், சீர்த்
தேசமிது தோன்றுவாய் வா வா வா

7. இளய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளி யிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த் தன்போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா.

8. வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்று மைக்குளுய்யவே நாடெல்லாம்
ஒருபெ ருஞ்செயல் செவ்வாய் வா வா வா

-பாரதியார்

வாழிய செந்தமிழ்

ஆசிரியப்பா

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளரந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!


-பாரதியார்

Wednesday, June 14, 2006

சுதந்திரம் தாகம்

(தாளம்- ஆதி; ராகம்- கமாஸ்)

1. என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்?
என்றெம தன்னகை விலங்குள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
ஆரியர் வாழ்வினை அதரிப் போனே!
வென்றி தருந்துனை நின்னரு ளன்றோ?
மெய்யடி யோம் இன்னும்வாடுதல் நன்றோ?

2. பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்லென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
ஆரிய! நீயும்நின் அறம்மறந் தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
வீர சிகாமணி! ஆரியர் கோனே!

-பாரதியார்

Tuesday, June 13, 2006

தமிழ் நாடு

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே_ இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே- ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

2. வேதம் நிறைந்த தமிழ்நாடு_ உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு_ நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல்- இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

3. காவிரி தென்பெண்ணை பாலாறு_ தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி_ என
மேவிய யாறு பலவோடத்_ திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

4. முத்தமிழ் மாமுனி நீள்வரையே_ நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே- அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

5. நீலத் திரைக்கட லோரத்தில்_ நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை_ வட
மாலவன் குன்றம் இவற்றிடையே_ புகழ்
மண்டிக் கிடக்குது தமிழ்நாடு (செந்தமிழ்)

6. கல்வி சிறந்த தமிழ்நாடு_ புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு_ நல்ல
பல்லித மாயின சாத்திரத்தின்_ மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

7. வள்ளுவன் தன்னை உலகினுக்கே- தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்_ மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

8. சிங்கள்ம புட்பகம் சாவக- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி_ அங்கு
தங்கள் புலிக்கொடி மீன் கொடியும்- நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

9. விண்ணை யிடிக்கும் தலையிமயம்_ எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்_ சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கொடுத்தார்_ தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

10. சீன மிசிரம் யவனரகம்_ இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்- கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

-பாரதியார்

Monday, June 12, 2006

இருபுறம்

என்
ஒருபுறம் அல்ல
மறுபுறம் அல்ல
இருபுறமும் நீதான்
என்னோடு இருக்கும்
உன்னைப் பிரித்தால்
மண்ணோடு மண்ணாகத்தான்
மடிந்து வீழ்வேன்.

- பி.எம்.நாகராஜன்

பாரத தேசம்

பல்லவி

பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்_ மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைகொல்லு வார்

சரணங்கள்

1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் வீடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்குவோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அÛம்பபோம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்;
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினியே பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

5. சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துங் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)

8. பட்டினியில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

9. ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்.
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம் (பாரத)

10. குடைகள்செய் வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

11. மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தில் கண்டுதெளிவோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)

12. காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்லருலை வளர்ப்போம்;
ஒவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய்வோம்;
உலகத் தொழிலனைத்து மூவந்து செய்வோம் (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர். (பாரத)

-பாரதியார்

Thursday, June 08, 2006

பாரத நாடு

பல்லவி

பாருக்கள்ளே நல்ல நாடு _எங்கள்
பாரத நாடு

சரணங்கள்

1. ஞானத்தி லேபர மோனத்தி லே_ உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

2. தீரத்தி லேபடை வீரத்திலே _நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு _இந்தப் (பாருக்)

3. நன்மையி லேஉடல் வன்மையிலே_ செல்லப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்)

4. ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கக் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

5. வண்மையி லேஉளத் திண்மையிலே_ மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாதபுலவர்
உணர்வினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

6. யாகத்தி லேதவ வேகத்திலே_ தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ தெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

7. ஆற்றினி லேகனை ஊற்றினிலே_ தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

8. தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே_ கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தோட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு_ இந்தப் (பாருக்)

-பாரதியார்

Wednesday, June 07, 2006

கன்னியாக்குமரி

அம்மா!

சிவனுக்கே தன்னைத்தர
தவம் செய்த தாயே!
கார்த்தியாயினியே!
கன்னியாக்குமரியே!

மகளாகப் பிறந்து - என்
மண்ணைப் புகழாக்கினாயே!
கன்னியாக நின்று - உன்
காதலைப் புனிதமாக்கினாயே!

முக்கடலே மகராசி! - உன்
மூக்குத்தி மகிமைக்கு
திறவாமல் வைத்திருக்கும்
நின் கிழக்கு திருநடையே சாட்சி

அம்மா!
சுற்றும் பூமிக்கு - உன்
சுட்டு விரலே அச்சு
கதிரவன் குளிருக்கு - உன்
கார் குழலே போர்வை.
இமயத்தின் வியர்வைக்கு- உன்
இமைகளே விசிறி
கரும்பின் நாகசப்புக்கு - உன்
திருநாமமே இனிமை
ஆகாயம் உறங்க - உன்
அடிநகமே பாய்.

தாலாட்டும் தென்றலில் - உன்
தாய்மை தெரியுதம்மா.
சங்குகள் சிப்பிகளில் - உன்
தூய்மை தெரியுதம்மா
சீறிவரும் அலைகளில் - உன்
சினம் தெரியுதம்மா
கரையிலாக் கடலே - உன்
மனம் தெரியுதம்மா

திருகல்யாண விருந்தின்
அறுசுவை உண்வுகளும்
விதவிதமான மணலானது
விந்தையா! வினோதமா!

அடையவந்த அசுரனை
அடையாளம் தெரியாத
சிறுசிறு துண்டாக கிளித்து
பெருங்கடலில் எறிந்தவளே
பெரிய நாயகியே!

ஜெபமாலை தாங்கிய
ஜெகன்மோகினியே தேவி
உன் தரிசனமே
உலகில் உயிர்களுக்கு
ஜென்ம பலனம்மா!


-பி.எம்.நாகராஜன்

வந்தே மாதரம்

பல்லவி

வந்தே மாதரம் என்போம் _எங்கள்
மாநிலத் தாயை வணங்குது என்போம்

சரணங்கள்

1. ஜாதி மரங்களை பாரோம்_ உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எயதின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே_ அன்றி
வேறு குலத்தின் ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும_ அவர்
எம்முடன் வாழ்த்திங் கிருப்பவர் அன்றோ?
சினத்த ராய்விடு வாரோ?_ பிற
தேசத்தார் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி_ எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?- ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்_ தம்முன்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு_ நம்மில்
ஒற்றமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்_ இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும் நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப்- பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

-பாரதியார்

Tuesday, June 06, 2006

நாட்டு வணக்கம்

எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
இருந்ததும் இந்நாடே- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே_ அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே_ இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ?- இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?- 1

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே_ எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே_ அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே_ தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே- இதை
வந்தே மாதரம் வந்மே மாதரம்
என்று வணங்கேனோ?- 2

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே_ அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே- மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே_ பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே_ இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

-பாரதியார்

Monday, June 05, 2006

கண்ணம்மாவின் காதல்

1. காற்று வெளியிடைக் கண்ணம்மா,_ நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;_ அமு
தூற்றினை யொத்த இதழ்களும்- நில
வூறித் ததும்பும் விழிகளும்- பத்து
மாற்றுப்பொன் னாத்தநின் மேனியும்- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்_ எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே _இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!- இந்தக் (காற்று)

2. நீயென தின்னுயிர் கண்ணம்மா_ எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்_ துயர்
போயின, போயின துன்பங்கள்_ நினைப்
பொன்னெக் கொண்ட பொழுதிலே_ என்றன்
வாயினி லேயமு தூறுதே_ கண்ணம்
மாவென்ற பேர் சொல்லும் போழ்திலே_ உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!_ என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!_ இந்தக் (காற்று)

-பாரதியார்

கண்ணம்மாவின் நினைப்பு

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி!- கண்ணம்மா!
தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

சரணங்கள்

பொன்னையே நிகர்த்த மேனி மின்னை யே, நிகர்த்த சாயற்
பின்னையே!- நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்)

மாரனம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ- கண்
பாராயோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்)

யாவுமே -இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்)

-பாரதியார்

Friday, June 02, 2006

கடல்

ஓடமே - நீ
தவழ்ந்து தவழ்ந்து
நானொன்றும்
தாழ்ந்து விடப்போவதில்லை
உன்னை
தாலாட்டவே - நான்
தண்ணீராக வரம்
வாங்கி வந்தேன்.

-பி.எம்.நாகராஜன்

என் இளையவனுக்கு...

கொஞ்சும் மழலை மொழி
ரசித்திடல் வேண்டும்
கொடும் தீயவர்தம் நட்புதனை
விலக்கிடல் வேண்டும்
அன்பெனும் ஆயுதம் என்றும்
கைதனில் வேண்டும்
வாழ்வுதனில் காதல்
முழுமையும் வேண்டும்
நன்மைக்கு என்றும்
உதவிடல் வேண்டும்
இயற்கையின் ஆற்றல்
அறிந்திடல் வேண்டும்
இறைவனை என்றும்
போற்றிடல் வேண்டும்
நம்பிக்கை என்பது
வாழ்வுதனில் வேண்டும்
முயற்சிகள் என்பது
மேற்கொள்ளல் வேண்டும்
தோல்வியின் காரணங்கள்
அறிந்திடல் வேண்டும்
வெற்றிகள் என்றும்
பெற்றிடல் வேண்டும்
மகிழ்ச்சியுடன் என்றும்
வாழ்ந்திடல் வேண்டும்.

M.ஜகபர் சாதிக்

அம்மாக் கண்ணு பாட்டு

1. பூட்டைத் திறப்பது கையேலே_ நல்ல
மனந் திறப்பது மதியாலே,
பாட்டைத் திறப்பது பண்ணாலே,- இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.

2. ஏட்டைத் துடைப்பது கையாலே- மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டையடிப்பது வில்லாலே_ அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.

3. காற்றை யடைப்பது மனதாலே_ இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே- உயிர்
துணை வுறுவது தாயாலே. (பூட்டைத்)

-பாரதியார்