
தமிழ் குழந்தை
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
Thursday, September 23, 2010
Monday, September 20, 2010
மகாமகம்
தினம்தினம் நான் தேடும்
தேவதை அம்மா - நீ
தேவியர் துதிபாடும்
ஸ்ரீதேவி அம்மா
அதிகாலை பூக்கும்
கதிரவன் அம்மா - முழு
மதிமுகம் பார்க்கும்
நதி நீர் அம்மா
ஆயர் பாடியில்
யசோதை அம்மா - நீ
மீனவர் குடியில்
ஸ்ரீசுதாமணி அம்மா.
புல்வெளி உறக்கம்
பனித்துளி அம்மா - கோடி
மின்மினி பறக்கும்
உன்விழி அம்மா
கார்த்திகையில் தொடங்கியது
புதுயுகம் அம்மா
காத்திருந்து கொண்டாடும்
மாகாமகம் அம்மா
ஆறுகல் மூக்குத்தி
நூறு விண்மீனம்மா - அதைக்
கருணையில் நீராட்டும்
இருகண் மீனம்மா
செவியோரம் சுருள்முடி
சிறுவாணி அருவியம்மா - அதைக்
பூங்கைகள் ஒதுக்குவது
புதுக்கவிதை அம்மா
ஒரு நிறம் அல்ல
கரு நிறம் அம்மா - அது
எல்லாம் கலந்தவுன்
திரு நிறம் அம்மா
மழலைகள் பேசும்
பிழைமொழி அம்மா - அழகு
மயில் கண்டாடும்
மழைமுகில் அம்மா
திருவடியில் அடியார்கள்
ஒருகோடி அம்மா - நிதம்
பதம்தேடி வருவார்கள்
பலகோடி அம்மா
ஆயிரம் பாசுரம்
அலங்காரம் அம்மா - அவை
ரீங்காரம் செய்யும்
ஓங்காரம் அம்மா
ஆதிலிங்கமே சிவன்
ஜோதிலிங்கமே அம்மா - அதில்
பாதிலிங்கமே உமா
பார்வதி அம்மா
வானம் பெருக்கல்
வானம் அம்மா - அதுவுன்
ஞானம் அன்பு
தானம் அம்மா
வாரண ஆரண்யம்
கேரளம் அம்மா - அதன்
தீராப் பெருமைக்கு
காரணம் அம்மா
எல்லோருக்கும் தாயாக
இருக்கும் அம்மா - என்
இல்லத்தில் சேயாக
வருவாய் அம்மா.
-பி.எம். நாகராஜன்
தேவதை அம்மா - நீ
தேவியர் துதிபாடும்
ஸ்ரீதேவி அம்மா
அதிகாலை பூக்கும்
கதிரவன் அம்மா - முழு
மதிமுகம் பார்க்கும்
நதி நீர் அம்மா
ஆயர் பாடியில்
யசோதை அம்மா - நீ
மீனவர் குடியில்
ஸ்ரீசுதாமணி அம்மா.
புல்வெளி உறக்கம்
பனித்துளி அம்மா - கோடி
மின்மினி பறக்கும்
உன்விழி அம்மா
கார்த்திகையில் தொடங்கியது
புதுயுகம் அம்மா
காத்திருந்து கொண்டாடும்
மாகாமகம் அம்மா
ஆறுகல் மூக்குத்தி
நூறு விண்மீனம்மா - அதைக்
கருணையில் நீராட்டும்
இருகண் மீனம்மா
செவியோரம் சுருள்முடி
சிறுவாணி அருவியம்மா - அதைக்
பூங்கைகள் ஒதுக்குவது
புதுக்கவிதை அம்மா
ஒரு நிறம் அல்ல
கரு நிறம் அம்மா - அது
எல்லாம் கலந்தவுன்
திரு நிறம் அம்மா
மழலைகள் பேசும்
பிழைமொழி அம்மா - அழகு
மயில் கண்டாடும்
மழைமுகில் அம்மா
திருவடியில் அடியார்கள்
ஒருகோடி அம்மா - நிதம்
பதம்தேடி வருவார்கள்
பலகோடி அம்மா
ஆயிரம் பாசுரம்
அலங்காரம் அம்மா - அவை
ரீங்காரம் செய்யும்
ஓங்காரம் அம்மா
ஆதிலிங்கமே சிவன்
ஜோதிலிங்கமே அம்மா - அதில்
பாதிலிங்கமே உமா
பார்வதி அம்மா
வானம் பெருக்கல்
வானம் அம்மா - அதுவுன்
ஞானம் அன்பு
தானம் அம்மா
வாரண ஆரண்யம்
கேரளம் அம்மா - அதன்
தீராப் பெருமைக்கு
காரணம் அம்மா
எல்லோருக்கும் தாயாக
இருக்கும் அம்மா - என்
இல்லத்தில் சேயாக
வருவாய் அம்மா.
-பி.எம். நாகராஜன்
Wednesday, March 31, 2010
நேசிக்க மாட்டாயா?
உன்னை - நான்
நேசிக்கும் அளவு
என்னை - நீ
நேசிக்க வேண்டாம்.
நீரை - வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை - நீ
நேசிக்க மாட்டாயா?
-பி.எம். நாகராஜன்
நேசிக்கும் அளவு
என்னை - நீ
நேசிக்க வேண்டாம்.
நீரை - வேர்
நேசிக்கும் அளவாவது
என்னை - நீ
நேசிக்க மாட்டாயா?
-பி.எம். நாகராஜன்
Tuesday, December 08, 2009
நேரமில்லை
உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் - அந்த
வானம் அழுகிறது
ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட
நேரமில்லை என்கிறாய்.
-பி.எம். நாகராஜன்
நான்படும்
வேதனை சகிக்காமல் - அந்த
வானம் அழுகிறது
ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட
நேரமில்லை என்கிறாய்.
-பி.எம். நாகராஜன்
Friday, December 04, 2009
நிலவாக
இரவாக இருந்தாலும்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை
நிலவாக
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக
நான் வருவேன்.
-பி.எம். நாகராஜன்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை
நிலவாக
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக
நான் வருவேன்.
-பி.எம். நாகராஜன்
Monday, November 23, 2009
சுவாசம்
மனதோடு
மற்போர்
செய்பவளே!
மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவளே!
நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்
அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்
-பி.எம். நாகராஜன்
மற்போர்
செய்பவளே!
மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவளே!
நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்
அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்
-பி.எம். நாகராஜன்
Friday, November 06, 2009
நன்றிக் கடன்
ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று
இது எனக்கு
தரப்பட்ட
தண்டனையல்ல
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.
-பி.எம். நாகராஜன்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று
இது எனக்கு
தரப்பட்ட
தண்டனையல்ல
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.
-பி.எம். நாகராஜன்
Subscribe to:
Posts (Atom)