Monday, April 07, 2008

சொந்தம்

இத்தனை இரவுகள்
கடந்து வந்திருக்கிறேன்
எத்தனை சொந்தங்கள்
நட்சத்திரக் கூட்டங்களுக்கு நடுவே
நிலவு
இன்று ஏனோ உணர்கிறேன்
பிரிவை
சூரியனைப் பிரிந்து உறங்காமல்
தேய்ந்துகொண்டிருக்கும்
நிலவு!

- மங்கை

2 comments:

  1. அண்ணே பிரிவு இருந்தால் தான்
    அன்பை உணர முடியும்

    ReplyDelete
  2. உள்ளம் உள்ளம் பெரிதாய் இருந்தால்
    உலகம் ரொம்பச் சின்னதடா
    ஊனப்பட்ட நிலவும் ஒருநாள்
    பௌர்ணமி ஆகுமடா"

    நான் சொல்லவில்லை கவியரசு வைரமுத்து சொன்னவை.

    ReplyDelete