Monday, July 03, 2006

பெருந்தலைவர் காமராஜ் - பகுதி : 1

இந்திய சுதந்திர பொன்விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா சிறப்பு கவியரங்கத்தில் கல்லூரிகள் அளவில் முதல் பரிசினை பெற்று இந்தியவானொலியின் நாகர்கோவில் பிரிவில் ஒலிப்பரப்பப்பட்ட கவிதை.

நான்
குருசேத்திரத்தில்
குருவானவன்
ஜெருசேலத்தில்
கருவானவன்
உன்
முகக்கண்ணுக்கு தெரியாத
மூச்சுக்காற்று நான்
யுகம் தோறும்
முகம் எனக்கு வேறு
நான் ஒன்றுதான்
நீ
இந்து எனில்
நான் இஸ்லாம்
நீ
இஸ்லாம் எனில்
நான் கிறிஸ்து

சிந்தித்து சிந்தித்து
சிந்தனை சிக்காகிவிட்டதா?
பேனா
பேமாரித்தனம் செய்கிறது
சிந்தனை
சீமத்தனம் செய்கிறதா?
நீ
கருவாவதற்கு முன்பே
கல்லறையானவனை கவியரங்கின்
கருவாக்கிவிட்டார்களே!
சொல்லிவிட்டால்
கொல்லிமலையும்
இடம்பெயர்ந்து வரும்
இவனை இதிகாசமாக்க
உன்
கவிதைகளா இந்த
காவியணியாதவனை
காவியமாக்கப்போகிறது?
அவன் கோவில்

காமராஜ்
கல்கியின்
பொன்னியின் செல்வன்
இல்லை
குமாரசாமியின்
சிவகாமியின் செல்வன்

கோகினூரிலிந்து
கொள்ளையடிக்கப்பட்ட
வைரம் இல்லை
விருதுப்பட்டியிலிருந்து
வெட்டி எடுக்கப்பட்ட
கட்டித்தங்கம்

தமிழுக்கு
தனியிலக்கணம் தந்த
தொல்காப்பியன்
இல்லை
அரசியலுக்கு
அணியிலக்கணம் தந்த
சொல்காப்பியன்

காமத்துப்பால்
கலவாத திருக்குறள்
இதுவரை
அறத்துப்பாலில் இணையாத
அதிகாரம்

பல்கலைக் கழக
பெயர்ப்பலகை மட்டுமல்ல
காமராஜ் - அவன்
கட்டாயபாடமாக வேண்டிய
பாடத்திட்டம்.

காற்றில்
கரைந்து போகும்
கற்பூரமல்ல
காமராஜ்
கப்பலை கரைசேர்த்த
நங்கூரம்
தமிழனுக்கு
கர்வம் தந்த
கம்பீரம்

எல்லையைத்
தாண்டி வந்து
குமரியின்
தாகம் தீர்த்த
தாமிரபரணி

திருவாசகத்தில்
ஒருவாசகம்கூட
பயிலாத
பெருவாசகம்

இந்தியாவின்
பட்டத்து யானை
அவன்
ஆள்காட்டி விரலில்
பிரதமர்களின்
பட்டியல்
ஆடிப்போகும்

காமராஜ்
வெல்ல முடியாத
வெற்றி
மூழ்க முடியாத
ஆழம்
ஏறமுடியாத
உயரம்
கடக்க முடியாத
தூரம்
கணக்கிட முடியாத
எண்ணிக்கை

அவன்
தொண்டுகளை
அடுக்கினால் அதன்
கொண்டையில்
வானம் தட்டும்
இன்றுவரை
பூமி சுற்றிய
சுற்றுகளின் மொத்தம்
அவற்றைப்
புத்தகமாக்க
இந்த பூமியில்
பதிப்பகங்கள்
பத்தாது
அது
தொட்க்கம் தெரியாத
பூமியின் பாதை
பாதியில் நிற்கும்
பாரதியின்
பாஞ்சாலி சபதம்
மீதியைத் தர
மீண்டும் அவனே
வரவேண்டும்

காமராஜ்
வாடகை வீட்டில்
வாழ்ந்த
கொத்தனார்
மாற்றுத்துணி
இல்லாத
நெசவாளி
கருப்பு நிறத்தில்
கரந்த பால்
ஆறடி உயர
திருவிளக்கு
நடை பாதைக்கும்
வெளிச்சம் தந்த
நகராட்சி
தெருவிளக்கு.

-பி.எம்.நாகராஜன்

10 comments:

Anonymous said...

அடியும் தெரியாது
முடியும் தெரியாது
அவரது மாட்சிமைக்கு!

நல்ல கவிதை

posted by: sivagnanamji

siva gnanamji(#18100882083107547329) said...

அடியும் தெரியாது
முடியும் தெரியாது
அவரது மாட்சிமைக்கு!

நல்ல கவிதை

Anonymous said...

Beautiful.

Anonymous said...

it is a great tribute to
kamarajar

Anonymous said...

beautifull

posted by: K.PANDIAN

Anonymous said...

arpudhaman thaliavanuku tharapata unmaiyana parattu

posted by: tamizhan

MURUGAN S said...

கவிதை மிகவும் அருமை!
நண்பர் நாகரஜனுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

nalla kavithai, very nice

கிவியன் said...

தமிழ் குழந்தை, தலைவனுக்கு அழுகு சேர்க்க்கும் கவிதை அருமை. பகுதி-1 என்று குறிப்பிட்டுள்ளீர்கள், ஏற்கனவே டண்டனக்கா காமரஜரை பற்றி பதிந்துகொண்டிருக்கிறார். அவர் எழுதுவது முக்கால்வாசி அவரது ஆட்சியின் போது நடந்தவைகளை பற்றி மட்டுமே. உங்கள் பதிவு அதிலிருந்து வேறுபட்டு இருக்குமா?

Anonymous said...

கல்லதவன்
கற்கவைத்தவன்
உடுத்தாதவன் (பேன்ட்)
உடுக்கவைத்தவன்
திருமணமாகதவன்
திருமணமாக வைத்தவன்
தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகவைத்தன்
நம்மைப் போக வைத்தவன்
செல்வந்தனல்ல
நம்மை செல்வந்தனாக்தகியவன்
சொந்த வீடு இல்லதவன்
சொந்த வீடுகள் கிடைக்க வைத்தவன்
சொன்னால் இணைய தளம் பத்தாது அவன் புகழ் பாட
நண்பரே நன்றி பல நல்லவர் பதிவை இங்கிட்ட உமக்கு பலருக்கு அது மக்கு சிலருக்கு கிக்கு இதைப்படிப்பின்

posted by: என்னார்