உன் பிரிவால்
நான்படும்
வேதனை சகிக்காமல் - அந்த
வானம் அழுகிறது
ஆனால்
உனக்கோ என்னை
நினைத்துப் பார்க்கக்கூட
நேரமில்லை என்கிறாய்.
-பி.எம். நாகராஜன்
Tuesday, December 08, 2009
Friday, December 04, 2009
நிலவாக
இரவாக இருந்தாலும்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை
நிலவாக
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக
நான் வருவேன்.
-பி.எம். நாகராஜன்
பரவாயில்லை
இருளாக இருந்தாலும்
பரவாயில்லை
நிலவாக
நீ இருக்கும்
வானில் மட்டுமே
நட்சத்திரமாக
நான் வருவேன்.
-பி.எம். நாகராஜன்
Monday, November 23, 2009
சுவாசம்
மனதோடு
மற்போர்
செய்பவளே!
மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவளே!
நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்
அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்
-பி.எம். நாகராஜன்
மற்போர்
செய்பவளே!
மற்றெல்லாவற்றோடும்
விற்போர்
செய்பவளே!
நீலவான் போல
நீண்டதும் அல்ல
அலைகடல் போல
ஆழமானதும் அல்ல- என்
நேசம்
அது
உனக்காகவே
உயிரோடு இருக்கும் - என்
உயிரின் சுவாசம்
-பி.எம். நாகராஜன்
Friday, November 06, 2009
நன்றிக் கடன்
ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று
இது எனக்கு
தரப்பட்ட
தண்டனையல்ல
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.
-பி.எம். நாகராஜன்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று
இது எனக்கு
தரப்பட்ட
தண்டனையல்ல
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.
-பி.எம். நாகராஜன்
Subscribe to:
Posts (Atom)