காற்றில் வரும்
குப்பையாக மாறச்சொல்
மாறுகிறேன்
வானில் வரும்
மழைதுளியாக மாறச்சொல்
மாறுகிறேன்
ஆழ்கடலின் இருக்கும்
அலைகளாக மாறச்சொல்
மாறுகிறேன்
நெருப்பில் இருக்கும்
ஒழியாக மாறச்சொல்
மாறுகிறேன்
நிலத்தில் காணும்
கற்குவியலாக மாறச்சொல்
மாறுகிறேன்
ஆனால் என்னை
வேண்டாம் என்று
மட்டும்
சொல்லாதே
நான்
மாறமாட்டேன்
மடிந்துவிடுவேன்
பெண்ணே
நீ
உச்சரிக்கும் போதுதான்
என் பெயர்
எவ்வளவு
அழகு என்பது
நான் உன்னை
பார்க்கும் போதுதான்
தெரிகிறது
என் விழிக்கு என்ன
பயன் என்பது
Shreeram
No comments:
Post a Comment