Tuesday, February 21, 2006

என் இனிய கவிதை - ஸ்ரீராம்

சுனாமி

சுனாமி
வார்தையில்
ஒரு
விஷம்
பயம்
வந்து
சேரும்
ஒரு
புயல்
நம்மை
தாக்கும்
ஒரு
................

கனவு

ஆயிரம் வீடு கட்டும்
கொத்தனாருக்கு
குடிசை
கட்டும்
கனவு

பல்லாயிரம் முத்துக்களை
அள்ளி எடுக்கும்
மீனவனுக்கு
ஒரு முத்து
எடுக்கும்
கனவு

லட்சம் மூட்டை
நெல் பயிர் செய்யும்
உழவாளிக்கு
ஒரு நேரம்
கஞ்சி குடிக்கும்
கனவு

கோடிக்கு அதிபதியான
பணம் படைத்தவனுக்கு
பகல் முழுவதும்
சந்தோஷ
கனவு

கவிதை

கவிதை எழுதியது இல்லை
ஆனாலும்
கவிதை பிடிக்கிறது
தொடர்ந்து
படித்து கொண்டிருகிறேன்
அவள் கரு விழிகளில்

மலர்கள்

வாழ்க்கை எனும் பூச்சாடியில்
உபயோகமற்ற ஊத்தம் பூவாய்
அல்லாமல் புகழால்
உலகெங்கும் மணக்கும்
பன்னீர் ரோஜாவாய் வாழ வாழ்த்தும்
ஸ்ரீராம்

நீ

நீ என்றால் உன் என்று அர்த்தம்
உன் வாழ்க்கை உன் கையில்
உன் முன்னேற்றம் உன் கையில்
உன் எதிர்காலம் உன் கையில்
மொத்தமாக நீ உனக்கு மட்டும்

ஸ்ரீராம்

No comments: