நானில்லை
நீ
ஊதியவுடன் அணைந்து விட
நான் ஒன்றும்
திரி விளக்கு அல்ல.
தினம் தினம்
புதியதாய்
உதித்துவரும் சூரியன்
என்னைத் தீண்டிய
உன் கைகள்
கருகாமல்
இருந்திருந்தால்
நீ தீண்டியது
சத்தியமாக நானில்லை
- பி. எம். நாகராஜன்
தமிழ் கவிதை , தமிழ் சிறுகதைகள் , தமிழ் குறுநாவல்கள்
1 மறுமொழிகள்:
நண்பரின் கவிதை மிக மிக அருமை
தமிழ்குழந்தை
Post a Comment
<< முகப்பு