Monday, February 27, 2006

சிரிப்பு

நீல மேகங்கள்
மழை பொழிவது போல்
உன் சிரிப்பு ஒலி

மாலை நேர
இளம்வெயில் போல்
உன் சிரிப்பு ஒளி

காலை இளம் வெயில்
உன் இனிய பேச்சை
நினைவுக்கு கொண்டு வருகிறது

மதிய வெயில்
உன் கோபத்தை
ஞாபகப்படுத்துகிறது

இருள் சூழ்ந்த இரவு
உன் அமைதியை
உறுதி செய்கிறது

ஸ்ரீராம்

1 comment:

Anonymous said...

its realy nice, keep it and writing more and more