என் நெஞ்சுக்குள்
நான் கட்டிய
தஞ்சை பெரியகோவில் நீ
நீ ஏற்படுத்தும் நிழல்கூட
எனக்குமட்டும் தான்
சொந்தம்
-பி.எம்.நாகராஜன்
Tuesday, March 28, 2006
Monday, March 27, 2006
முத்தமும் யுத்தமும்
என்னை
முத்தமிடுவதும் நீ
யுத்தமிடுவதும் நீ
என்னை
அலங்காரம் செய்வதும் நீ
அலங்கோலம் செய்வதும் நீ
என்னை
சுகமாக்குவதும் நீ
சோகமாக்குவதும் நீ
உன்னால் மட்டுமே
என்னைக்கழுவ முடியும்
உன்னால் மட்டுமே
என்னைத் தழுவ முடியும்
அதனால்தான் சொல்கிறேன்
நீ அலைகடல்
நான் உன்கரை
-பி.எம்.நாகராஜன்
முத்தமிடுவதும் நீ
யுத்தமிடுவதும் நீ
என்னை
அலங்காரம் செய்வதும் நீ
அலங்கோலம் செய்வதும் நீ
என்னை
சுகமாக்குவதும் நீ
சோகமாக்குவதும் நீ
உன்னால் மட்டுமே
என்னைக்கழுவ முடியும்
உன்னால் மட்டுமே
என்னைத் தழுவ முடியும்
அதனால்தான் சொல்கிறேன்
நீ அலைகடல்
நான் உன்கரை
-பி.எம்.நாகராஜன்
Saturday, March 25, 2006
திரும்பிவருவாய்
நான் உன்னை
மறக்கவும் இல்லை
வெறுக்கவும் இல்லை
உன் விருப்பப்படியே
உன்னை பறக்க விட்டிருக்கிறேன்
நீ என்னை
விரும்பிய பறவையானால்
திருந்திய இறக்கைகளோடு
நிச்சயம்
திரும்பி வருவாய்.
-பி.எம்.நாகராஜன்
மறக்கவும் இல்லை
வெறுக்கவும் இல்லை
உன் விருப்பப்படியே
உன்னை பறக்க விட்டிருக்கிறேன்
நீ என்னை
விரும்பிய பறவையானால்
திருந்திய இறக்கைகளோடு
நிச்சயம்
திரும்பி வருவாய்.
-பி.எம்.நாகராஜன்
தோற்றுப்பார்
உன் ஈகோவை எல்லாம்
தூக்கி எரிந்துவிட்டு
உன்னை
உண்மையாக நேசிக்கும்
ஒரு உயிரிடம்
தோற்றுப்பார்
அந்த தோல்வி
சொர்க்கத்தின் சாவி
-பி.எம்.நாகராஜன்
தூக்கி எரிந்துவிட்டு
உன்னை
உண்மையாக நேசிக்கும்
ஒரு உயிரிடம்
தோற்றுப்பார்
அந்த தோல்வி
சொர்க்கத்தின் சாவி
-பி.எம்.நாகராஜன்
Friday, March 24, 2006
தென்றல்
காலை முதல் மாலை வரை
இதமாக வீசும் ஒரு இனிய கீதம்
காலை இதமாகவும்
மதியம் அனலாகவும்
மாலை பதமாகவும்
இரவு இனிமையாகவும்
வீசும் இன்ப காற்று
என்றும் ஒய்வில்லாத
தீடீரென்று புயலாய்
வீசும் கொடூரம்-புயல்
- புன்னகை மன்னன்
இதமாக வீசும் ஒரு இனிய கீதம்
காலை இதமாகவும்
மதியம் அனலாகவும்
மாலை பதமாகவும்
இரவு இனிமையாகவும்
வீசும் இன்ப காற்று
என்றும் ஒய்வில்லாத
தீடீரென்று புயலாய்
வீசும் கொடூரம்-புயல்
- புன்னகை மன்னன்
Thursday, March 23, 2006
உன்னை இழந்தால்
நொடிக்கு நொடி மாற
நான் ஒன்றும்
கடிகார முள் இல்லை
உனக்கு மட்டுமே சொந்தமான
உன் நிழல்.
நான் உன்னை இழந்தால்
இந்த பூமி
என்னை இழக்கும்
-பி.எம்.நாகராஜன்
நான் ஒன்றும்
கடிகார முள் இல்லை
உனக்கு மட்டுமே சொந்தமான
உன் நிழல்.
நான் உன்னை இழந்தால்
இந்த பூமி
என்னை இழக்கும்
-பி.எம்.நாகராஜன்
Wednesday, March 22, 2006
உன்னருகில்
எனக்கு - நீ
நானாக தெரிகிறாய்
உனக்கு - நான்
நீயாகத் தெரியும்போது
உன்னருகில்தான் இருப்பேன்
நீயாகவே நான் இருப்பேன்.
-பி.எம்.நாகராஜன்
நானாக தெரிகிறாய்
உனக்கு - நான்
நீயாகத் தெரியும்போது
உன்னருகில்தான் இருப்பேன்
நீயாகவே நான் இருப்பேன்.
-பி.எம்.நாகராஜன்
முயற்ச்சி
முகில்களை
முத்தமிட நினைக்கும்
அலைகள் தான்
கரைகளைக்
கடக்கும்.
முயற்ச்சிகளை
முடிவிலியாக வை.
-பி.எம்.நாகராஜன்
முத்தமிட நினைக்கும்
அலைகள் தான்
கரைகளைக்
கடக்கும்.
முயற்ச்சிகளை
முடிவிலியாக வை.
-பி.எம்.நாகராஜன்
Tuesday, March 21, 2006
என் இனிய பயணம்
காலையில் கதிரவனின்
கனிவில்லா கதிர்வீச்சால் எழுந்து
கிணற்று நீரை இறைத்து
கெளரவமாய் குளித்து விட்டு...
காலை உணவை முடித்து
காலணிகளை மெருகூட்டி
கம்பீரமான நடையோடு
குழந்தைகள் கை அசைத்து அனுப்ப...
நாற்பத்தி ஏழு ஏ பேருந்து அது
நாற்பது நிமிட பயணப் பேருந்து
நால்வரின் இனிய
நற்செய்திகளை கேட்டு...
என்னோடு என் ஊழியர்களும்
என் பாச மிகு மாணவர்களும்
என்னருகில் நின்று கொண்டிருக்க...
வரும் வழியினிலே
வரைகலை வித்தகரை சந்தித்து
வன்முறையில்லா வார்த்தைகளுக்கு
வெள்ளைக் கொடி காட்டி விட்டு...
சீரிய நடையோடு
சிந்தனை சிற்பியாய்
செம்மையாய் என் பணியை
சுதந்திரமாய் செய்திட
புறப்பட்டேன் இன்று!!!
- ஜஹபர் சாதிக்.M
கனிவில்லா கதிர்வீச்சால் எழுந்து
கிணற்று நீரை இறைத்து
கெளரவமாய் குளித்து விட்டு...
காலை உணவை முடித்து
காலணிகளை மெருகூட்டி
கம்பீரமான நடையோடு
குழந்தைகள் கை அசைத்து அனுப்ப...
நாற்பத்தி ஏழு ஏ பேருந்து அது
நாற்பது நிமிட பயணப் பேருந்து
நால்வரின் இனிய
நற்செய்திகளை கேட்டு...
என்னோடு என் ஊழியர்களும்
என் பாச மிகு மாணவர்களும்
என்னருகில் நின்று கொண்டிருக்க...
வரும் வழியினிலே
வரைகலை வித்தகரை சந்தித்து
வன்முறையில்லா வார்த்தைகளுக்கு
வெள்ளைக் கொடி காட்டி விட்டு...
சீரிய நடையோடு
சிந்தனை சிற்பியாய்
செம்மையாய் என் பணியை
சுதந்திரமாய் செய்திட
புறப்பட்டேன் இன்று!!!
- ஜஹபர் சாதிக்.M
Monday, March 20, 2006
மது
மலிவு விலை அதற்கு பெயர்
மனிதன் அருந்தியதும் அவனுக்கு
மகத்துவமாய் தெரிகிறது
மங்கலமாய் அவன் இருக்கும் வரை...
சாலைகளை சோலைகளாக்கி
சூரியனின் சூட்டில்...
சிலைகளாய் அவன்
சிதறிய உடையுடன்
அருந்திய மதுவினால் அவன்
அவனுக்கே தெரியாமல்...
ராட்டினம் போல்
ரோட்டில் நடக்கிறான்.
குப்பியில் இருந்த குவாட்டரை
குடித்து விட்டு...
குடும்பத்தில் குழப்பத்தை
கச்சிதமாய் காய் நகர்த்தி
மனித மிருகமாய்
மனைவி மக்களிடம்
மல்யுத்தம் செய்து...
மண்டையில் குருதி
மள மள சொட்டச் செய்கிறான்.
டாஸ் மார்க் கணவனுக்கு
டல் அடித்துப் போன மனைவி...
டைவர்ஸ் சொல்ல
நீதிமன்றத்தில் நிற்க்க...
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
லேபிள் ஒன்று ஒட்டி
லாபம் ஒன்று பார்க்கும்
லட்சியவாதிகளே!
உங்கள் லட்சியம் என்ன?
மனிதனை மனிதனாய்
வாழ விட மாட்டோம் என்பதோ?
இளைய சமுதாயமே!
இன்றே உறுதிகொள்!
இது போன்ற இன்னல்களிலிருந்து!
இனியேனும் விடுதலை பெற !!!
- ஜஹபர் சாதிக்.M
மனிதன் அருந்தியதும் அவனுக்கு
மகத்துவமாய் தெரிகிறது
மங்கலமாய் அவன் இருக்கும் வரை...
சாலைகளை சோலைகளாக்கி
சூரியனின் சூட்டில்...
சிலைகளாய் அவன்
சிதறிய உடையுடன்
அருந்திய மதுவினால் அவன்
அவனுக்கே தெரியாமல்...
ராட்டினம் போல்
ரோட்டில் நடக்கிறான்.
குப்பியில் இருந்த குவாட்டரை
குடித்து விட்டு...
குடும்பத்தில் குழப்பத்தை
கச்சிதமாய் காய் நகர்த்தி
மனித மிருகமாய்
மனைவி மக்களிடம்
மல்யுத்தம் செய்து...
மண்டையில் குருதி
மள மள சொட்டச் செய்கிறான்.
டாஸ் மார்க் கணவனுக்கு
டல் அடித்துப் போன மனைவி...
டைவர்ஸ் சொல்ல
நீதிமன்றத்தில் நிற்க்க...
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
லேபிள் ஒன்று ஒட்டி
லாபம் ஒன்று பார்க்கும்
லட்சியவாதிகளே!
உங்கள் லட்சியம் என்ன?
மனிதனை மனிதனாய்
வாழ விட மாட்டோம் என்பதோ?
இளைய சமுதாயமே!
இன்றே உறுதிகொள்!
இது போன்ற இன்னல்களிலிருந்து!
இனியேனும் விடுதலை பெற !!!
- ஜஹபர் சாதிக்.M
Wednesday, March 15, 2006
பார்வை
அடி பெண்ணே
பார்வை என்னும்
புள்ளியை வைத்துவிட்டு
அன்பு என்னும் கோலம்
போடாமல் சென்றால்
அதற்கு என்ன அர்த்தம்
அடி பெண்ணே
பார்வை என்னும்
அம்பை எய்து விட்டு
அதற்கு அன்பு என்ற
மருந்து போடாமல் சென்றால்
அதற்கு என்ன அர்த்தம்
- புன்னகை மன்னன்
பார்வை என்னும்
புள்ளியை வைத்துவிட்டு
அன்பு என்னும் கோலம்
போடாமல் சென்றால்
அதற்கு என்ன அர்த்தம்
அடி பெண்ணே
பார்வை என்னும்
அம்பை எய்து விட்டு
அதற்கு அன்பு என்ற
மருந்து போடாமல் சென்றால்
அதற்கு என்ன அர்த்தம்
- புன்னகை மன்னன்
நீ சிந்திய சிரிப்பில்
நீ சிந்திய சிரிப்பில்
என் இதய துடிப்பு
அதிகமானது
நீ பார்க்கும் அந்த
சிறிய பார்வை
என் விடியல்
உன் ஓரபார்வை
எனக்கு பெளர்ணமி
நிலவு
நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பு
நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தில்
தோன்றும் புதுக்கவிதை
உன் ஒவ்வொரு
செயலையும் வர்ணிக்க
நான் நல்ல
கவிஞனும் இல்லை
- புன்னகை மன்னன்
என் இதய துடிப்பு
அதிகமானது
நீ பார்க்கும் அந்த
சிறிய பார்வை
என் விடியல்
உன் ஓரபார்வை
எனக்கு பெளர்ணமி
நிலவு
நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பு
நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தில்
தோன்றும் புதுக்கவிதை
உன் ஒவ்வொரு
செயலையும் வர்ணிக்க
நான் நல்ல
கவிஞனும் இல்லை
- புன்னகை மன்னன்
Monday, March 13, 2006
நினைகின்றாய்
நீ நினைகிறாய்
உன்னிடத்தில்
என் நினைவு இல்லை
என்று
ஆனால்
எனக்கு தெரியும்
இருக்கின்றது
என்று
எப்படி என்று
கேட்கின்றாயா?
மழை வருவதை
வானம் காட்டிவிடும்
புயல் வருவதை
மரங்கள் காட்டிவிடும்
அதுபோல்
உன் மனதை
உன் செயல் காட்டிவிடும்
உன் அன்பை
வெளிகாட்ட
மறுக்கின்றாய்
ஏன்?
ஒவ்வொரு நாளும்
அந்த உன் சிரிப்பு
அந்த உன் பார்வை
அது என்றும்
எனக்காக
வேண்டி
மட்டும்
அமைய
எனக்கு சாதகமான
உன் பதிலை
எதிபார்த்து காத்திருக்கும்
உன் செல்லம்
புன்னகை மன்னன்
உன்னிடத்தில்
என் நினைவு இல்லை
என்று
ஆனால்
எனக்கு தெரியும்
இருக்கின்றது
என்று
எப்படி என்று
கேட்கின்றாயா?
மழை வருவதை
வானம் காட்டிவிடும்
புயல் வருவதை
மரங்கள் காட்டிவிடும்
அதுபோல்
உன் மனதை
உன் செயல் காட்டிவிடும்
உன் அன்பை
வெளிகாட்ட
மறுக்கின்றாய்
ஏன்?
ஒவ்வொரு நாளும்
அந்த உன் சிரிப்பு
அந்த உன் பார்வை
அது என்றும்
எனக்காக
வேண்டி
மட்டும்
அமைய
எனக்கு சாதகமான
உன் பதிலை
எதிபார்த்து காத்திருக்கும்
உன் செல்லம்
புன்னகை மன்னன்
Wednesday, March 08, 2006
தினமலர் இதழுக்கு நன்றி
தமிழ் குழந்தை இணயதளத்தினை தினமலரின் டாட் காம் பகுதியில் 25-2-2006 அன்று தமிழில் படிக்க கிடைக்கும் தளங்கள் வரிசையில் வெளியிட்டமைக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் - தொடுப்பு
Tuesday, March 07, 2006
காத்திருப்பேன்
பெண்ணே நீ என்னை விட்டு
வெகு தொலைவில் சென்றாலும்
நீ வரும் வழியை நோக்கி
என் இரு கண்களும் காத்திருக்கும்
பெண்ணே காலங்கள் சென்ற பின்
என்னிடம் நீ வரும் போது
என் கண்கள் மட்டுமல்ல என் உயிரும்
உனக்காக என் கல்லறையில் காத்திருக்கும்
Sreejith
வெகு தொலைவில் சென்றாலும்
நீ வரும் வழியை நோக்கி
என் இரு கண்களும் காத்திருக்கும்
பெண்ணே காலங்கள் சென்ற பின்
என்னிடம் நீ வரும் போது
என் கண்கள் மட்டுமல்ல என் உயிரும்
உனக்காக என் கல்லறையில் காத்திருக்கும்
Sreejith
Monday, March 06, 2006
Subscribe to:
Posts (Atom)