மலிவு விலை அதற்கு பெயர்
மனிதன் அருந்தியதும் அவனுக்கு
மகத்துவமாய் தெரிகிறது
மங்கலமாய் அவன் இருக்கும் வரை...
சாலைகளை சோலைகளாக்கி
சூரியனின் சூட்டில்...
சிலைகளாய் அவன்
சிதறிய உடையுடன்
அருந்திய மதுவினால் அவன்
அவனுக்கே தெரியாமல்...
ராட்டினம் போல்
ரோட்டில் நடக்கிறான்.
குப்பியில் இருந்த குவாட்டரை
குடித்து விட்டு...
குடும்பத்தில் குழப்பத்தை
கச்சிதமாய் காய் நகர்த்தி
மனித மிருகமாய்
மனைவி மக்களிடம்
மல்யுத்தம் செய்து...
மண்டையில் குருதி
மள மள சொட்டச் செய்கிறான்.
டாஸ் மார்க் கணவனுக்கு
டல் அடித்துப் போன மனைவி...
டைவர்ஸ் சொல்ல
நீதிமன்றத்தில் நிற்க்க...
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
லேபிள் ஒன்று ஒட்டி
லாபம் ஒன்று பார்க்கும்
லட்சியவாதிகளே!
உங்கள் லட்சியம் என்ன?
மனிதனை மனிதனாய்
வாழ விட மாட்டோம் என்பதோ?
இளைய சமுதாயமே!
இன்றே உறுதிகொள்!
இது போன்ற இன்னல்களிலிருந்து!
இனியேனும் விடுதலை பெற !!!
- ஜஹபர் சாதிக்.M
1 comment:
Exclusive delirium
Post a Comment