Wednesday, March 15, 2006

நீ சிந்திய சிரிப்பில்

நீ சிந்திய சிரிப்பில்
என் இதய துடிப்பு
அதிகமானது

நீ பார்க்கும் அந்த
சிறிய பார்வை
என் விடியல்

உன் ஓரபார்வை
எனக்கு பெளர்ணமி
நிலவு

நீ எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
என் இதயத்தின்
ஒவ்வொரு துடிப்பு

நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தில்
தோன்றும் புதுக்கவிதை

உன் ஒவ்வொரு
செயலையும் வர்ணிக்க
நான் நல்ல
கவிஞனும் இல்லை

- புன்னகை மன்னன்

No comments: