Monday, March 27, 2006

முத்தமும் யுத்தமும்

என்னை
முத்தமிடுவதும் நீ
யுத்தமிடுவதும் நீ
என்னை
அலங்காரம் செய்வதும் நீ
அலங்கோலம் செய்வதும் நீ
என்னை
சுகமாக்குவதும் நீ
சோகமாக்குவதும் நீ
உன்னால் மட்டுமே
என்னைக்கழுவ முடியும்
உன்னால் மட்டுமே
என்னைத் தழுவ முடியும்
அதனால்தான் சொல்கிறேன்
நீ அலைகடல்
நான் உன்கரை

-பி.எம்.நாகராஜன்

No comments: