காலையில் கதிரவனின்
கனிவில்லா கதிர்வீச்சால் எழுந்து
கிணற்று நீரை இறைத்து
கெளரவமாய் குளித்து விட்டு...
காலை உணவை முடித்து
காலணிகளை மெருகூட்டி
கம்பீரமான நடையோடு
குழந்தைகள் கை அசைத்து அனுப்ப...
நாற்பத்தி ஏழு ஏ பேருந்து அது
நாற்பது நிமிட பயணப் பேருந்து
நால்வரின் இனிய
நற்செய்திகளை கேட்டு...
என்னோடு என் ஊழியர்களும்
என் பாச மிகு மாணவர்களும்
என்னருகில் நின்று கொண்டிருக்க...
வரும் வழியினிலே
வரைகலை வித்தகரை சந்தித்து
வன்முறையில்லா வார்த்தைகளுக்கு
வெள்ளைக் கொடி காட்டி விட்டு...
சீரிய நடையோடு
சிந்தனை சிற்பியாய்
செம்மையாய் என் பணியை
சுதந்திரமாய் செய்திட
புறப்பட்டேன் இன்று!!!
- ஜஹபர் சாதிக்.M
1 comment:
தங்கள் இனிய பயணம் இனிமையாக தொடர வாழ்த்துக்கள்
தங்கள் கவிதை பயணமும் தொடர வாழ்த்துக்கள்
Post a Comment