Tuesday, April 25, 2006

அனுமதிக்காதே

நீ சூரியன்
நான் பூமி
உன் பார்வையிலிருந்து
மறையும் போது
இருளாகத்தான்
இருப்பேன்.

நீ நிலா
நான் நீரோடை
என்னில் மட்டும் தான்
நீ தெரிவாய்.

நீ என் சுவாசம்
என்னைத் தவிர
உன்னைத் தழுவ வருவது
ஆண்டவன் என்றாலும்
அனுமதிக்காதே.
தயவு செய்து
தவிர்த்து விடு.

- பி.எம்.நாகராஜன்

1 comment:

பரஞ்சோதி said...

நண்பரே!

உங்க வலைத்தளம் மிகவும் அருமையாக இருக்கிறது.

நீங்க சேமித்த கவிதைகளும் மிக அருமை.

தொடர்ந்து கொடுங்கள்.

சிறுவர் பாடலில் நீங்க கொடுத்த பின்னோட்டம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. நன்றி.

(இந்த வோர்ட் வெரிபிகேஷன் எடுத்து விட்டிடுங்க, உங்க கவிதை தலைப்பு போலவே இருக்குது :))